மருத்துவ அறிவியல் இவ்வளவு முன்னேற்றம் கண்டிருந்த போதிலும் மூளையை உண்ணும் அமீபாவிற்கு எதிராக இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அமீபாக்களுக்கு எதிரான மருந்துகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படும் போதிலும், மனித உடல்களை குணப்படுத்தும் அளவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலகத்தில் 2 பேர் மட்டுமே அமீபா தொற்று ஏற்பட்ட பின்னர் உயிர் பிழைத்துள்ளனர். அமீபா தொற்றுக்கு அம்போடெர்சின் உட்பட பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளையே தற்போது மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.