ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள் எல்லாம் அவரின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், பாஜக கூட்டணியில் இருந்து அண்ணாமலைக்காக வெளியேறவில்லை என்றார். மேலும் அண்ணாமலை எல்லாம் தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற விமர்சித்தார். ஜெயலலிதா புகைப்படம் பாமக பேனரில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.