தவறான தகவல்களை அளிப்பதை இபிஎஸ் நிறுத்த வேண்டும் என அமைச்சர் ரகுபதி எச்சரித்துள்ளார். ரேஷன் பொருட்கள் தமிழகம் முழுவதும் சீராக கிடைப்பதாக தெரிவித்துள்ள அவர், உள்நோக்கத்துடன் இபி எஸ் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை என கூறுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், விழுப்புரத்தில் நிகழ்ந்த உயிரிழப்பையும், கள்ளச்சாராய மரணம் என ஆதாரமில்லாமல் பேசி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.