பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆகஸ்ட் மாதத்திற்குள் கவிழ வாய்ப்புள்ளதாக RJD தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். பிஹாரில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கட்சித் தொண்டர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத் தேர்தல் வரலாம். மோடி அரசாங்கம் வலுவிழந்து இருக்கிறது.” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.