தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பொருளாளர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. எஸ்.ஆர்.சேகரின் தொலைப்பேசி உரையாடல் விசாரிக்கலாம் என்றும், ஆனால் செல்போனை ஒப்படைக்கும்படி வலியுறுத்தக் கூடாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.