தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களையும் போக்குவரத்து கழகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். இது தொடர்பான தனது அறிக்கையில், ஒரு லட்சத்து 81 ஆயிரம் முறை இயக்குவதற்கு மினி பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அதற்கான அரசாணையையும் ரத்து செய்து திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.