இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது மொபைல் கட்டண விலையை உயர்த்தி பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை 3ம் தேதி முதல், திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. OTT நன்மைகளுடன் கூடிய பொழுதுபோக்கு திட்டங்களும் திருத்தப்பட்டுள்ளன. இந்த உத்தரவில் சில திட்டங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. முன்னர் 21 பொழுதுபோக்கு திட்டங்கள் இருந்தது தற்போது அவை 7 ஆக குறைக்கப்பட்டுள்ளன.