பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்று ஆண்டுகால ஆட்சியில் வன்முறை வழக்கமாகிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். பதவியில் தொடர தார்மீக பொறுப்பு இருக்கின்றதா என்பதை முதல்வர் ஸ்டாலின் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.