மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில் கடந்த மாதத்தில் மட்டும் 21 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதே மருத்துவமனையில் நடைபாண்டில் மொத்தம் 110 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதில் ஜனவரி மாதம் 17, பிப்ரவரி மாதத்தில் 10, மார்ச் -22, ஏப்ரல் – 24, மே – 16 மற்றும் ஜூலை மாதத்தில் தற்போது வரை இரண்டு குழந்தைகள் உயிர் இழந்துள்ளன. இதற்கு யார் பொறுப்பு என்று அம்மாநில காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.