அண்ணாமலையை அரைவேக்காடு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். அதிமுகவை விமர்சித்தால் அண்ணாமலைக்கு எதிராக தொண்டர்கள் கொந்தளிப்பார்கள் என்றும் அப்படி எழுந்தால் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆத்மா கட்சியை காப்பாற்றும் என்று உதயகுமார் கூறியுள்ளார்.