பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மங்களமேடு அருகில் ரஞ்சன்குடி கிராமத்தில் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த அண்ணாமலையின் மகன் தான் ராஜேஷ்குமார்(32). விவசாய கூலித் தொழிலாளியான இவர் தம் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜேஷ் குமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் கல்யாணம் நடைபெற இருந்தது.
இதனிடையில் வயிற்றுவலியால் சிரமப்பட்டு வந்த ராஜேஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மங்களமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.