விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10 நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அந்த தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏப்ரல் ஆறாம் தேதி உயிரிழந்த நிலையில் இதனை தொடர்ந்து நடத்தப்படும் இடைத்தேர்தலில் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சி வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். 276 வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவில் 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர்.