தூத்துக்குடி எட்டயபுரம் அருகே சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது மோதி பாலத்தின் அடியில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வேனில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில், மூன்று சிறுவர்கள் உட்பட 14 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.