தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பாக திட்டமிட்டபடி இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மின்வாரியத்தில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல ஆணையத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய அலுவலகங்களில் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.