வெட்டுக்கிளி மற்றும் பட்டுப்புழு உள்ளிட்ட 16 பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் உணவுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2022 முதல் கருத்து கேட்பு மற்றும் கலந்தலோசனை நடத்தப்பட்ட நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பூச்சிகளை இறக்குமதி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஊட்டச்சத்து தேவைக்காக பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன