விக்கிரவாண்டி தொகுதியில் நாளைஇடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 10 நாட்களாக வெளியில் இருந்து ஆட்கள் பிரச்சாரத்திற்கு வந்தனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதால் தாராளமாக பணம் புழங்குகிறது. எனவே விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனை ரூ.1.20 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டியில் மொத்தமுள்ள 39 டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.