குண்டுகள், துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் அமைதிப்பேச்சு வெற்றியடையாது என ரஷ்ய அதிபர் புடினிடம், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது, போருக்கான காலம் அல்ல என அறிவுறுத்திய மோடி, உக்ரைனுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். எரிபொருள் பிரச்னையில் உலக நாடுகள் சிக்கியுள்ள வேளையில், இந்தியாவின் தேவையை உணர்ந்து ரஷ்யா உதவி வருவதற்கு, புடினுக்கு மோடி நன்றி கூறினார்.