படுகொலை செய்யப்பட்ட BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னை பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டிற்கு சென்ற அன்புமணி, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவிக்கும் ஆறுதல் தெரிவித்தார். பகுஜன் சமாஜ் தமிழக தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.