சீனாவில் டி.வியில் மூழ்கிய 3 வயது மகளுக்கு, தந்தை ஒருவர் நூதன தண்டனை கொடுத்துள்ளார். ஜியாஜியா என்ற அந்த குழந்தையை, அவரின் தந்தை உணவருந்த அழைத்துள்ளார். ஆனால், குழந்தை வராததால், டிவியை ஆஃப் செய்தார். இதனால் குழந்தை அழத்தொடங்கியது. உடனே குழந்தையிடம் ஒரு பவுலை தந்து, இதை கண்ணீரால் நிரப்பினால், மீண்டும் டிவி பார்க்கலாம் என்றார். சுதாரித்த குழந்தை, தந்தையுடன் உணவருந்த சென்றது.