டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் விளையாடுவது கடினமானது என இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ஆடுகளத்தில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி விளையாடுவதை பற்றி இப்போது விவாதிக்க தேவையில்லை என்று கூறிய அவர், அணியின் தலைமை முடிவை ஏற்று அணிக்கு தேவைப்படும் இடத்தில் பேட்டிங் செய்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.