கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் இரண்டு பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. சொந்த கட்சி மாமன்ற உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு மேயர்களும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இரு மன்றங்களிலும் திமுக உறுப்பினர்களே அதிகம் உள்ளதால் அக்கட்சியினரே மீண்டும் மேயராக வாய்ப்புள்ளது.