இந்தியாவின் பல மாநிலங்களில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்துள்ளது ஆங்காங்கே சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் விழிப்புடன் இருக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது. மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், மருந்து இருப்புகள் குறித்து கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.