பெண் காவலர் குறித்த சர்ச்சை கருத்துக்கு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட பின்னணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியும், தற்போதைய சென்னை கமிஷனருமான அருண் இருந்ததாகப் பேசப்பட்டது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடம் மாற்றப்பட அப்பதவியில் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர் வழக்கை திறமையாக கையாண்டதால் இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.