ஜி.வி.பிரகாஷ்குமார், தன் பள்ளித் தோழியும் பாடகருமான சைந்தவியை காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இணைந்து பாடிய பாடல்கள் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சைந்தவி பிரகாஷ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்த சைந்தவி, தற்போது பிரகாஷ் என்பதை நீக்கியுள்ளார்.