சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் அக். 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படம் 2 பாகங்களாக வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். பெரிய ட்விஸ்ட்டுடன் முதல் பாகம் முடியும் எனவும், 2025 இறுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 2027 ஜனவரி 2ஆம் பாகம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.