லோகோ பைலட்கள் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்கள் தருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். லோகோ பைலட்டுகளின் பணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும், அவசர காலங்களில் மட்டும் அவர்களின் பணி நேரம் சற்று அதிகமாக இருக்கும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், பயணங்களுக்கு பிறகு லோகோ பைலட்டுகளுக்கு ஓய்வளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.