தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரிய மேல்முறையீட்டு வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா அறிவித்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் அமர்வில், இன்று விசாரிக்கப்பட இருந்த நிலையில், வழக்கில் இருந்து அவர் விலகியுள்ளார். கடந்த ஆண்டு, தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.