நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால், தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பார்கள் எனவும், நீட் வினாத்தாள் எது என்பது அதை தயாரிப்பவர்களுக்கே தெரியாது என்றும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. நீட் முறைகேடு குற்றவாளிகளை கண்டறியாவிட்டால் தேர்வை ரத்து செய்வது அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.