அம்பானி வீட்டுத் திருமணம் சர்க்கஸ் மாதிரி இருப்பதாக, பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மகள் ஆலியா விமர்சித்துள்ளார். திருமணத்தில் பங்கேற்க தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அதில் பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், விளம்பரம் செய்வதற்காகவே பிரபலங்களை திருமணத்திற்கு அழைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,தனக்கு சுயமரியாதை இருப்பதாகவும் காட்டமாக கூறியுள்ளார்.