மத்திய பட்ஜெட்டில் 8 ஆவது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 8ஆவது ஊதியக்குழு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் ஊதிய முறையில் பல மாற்றங்கள் ஏற்படும். அடிப்படை ஊதியம், தினப்படி, ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது