நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், 22 மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், நீட் தேர்வை ரத்து செய்வது, தவறிழைக்காத மாணவர்களுக்கு செய்யும் அநீதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.