இந்தியா இந்த உலகிற்கு புத்தரை கொடுத்தது, யுத்தத்தை அல்ல என்று ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு பேசுகையில், இந்தியா எப்போதும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உலகிற்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக ரஷ்யா சென்று இருந்த போது உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் பேசிய பிரதமர், போர்க்களத்தில் தீர்வுகள் பிறக்காது என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.