MD, MS முதுநிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பொது, குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் மகப்பேறு உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பிற துறைகளுக்கான இட ஒதுக்கீட்டை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியுள்ள அரசு 50 சதவீதம் இட ஒதுக்கீடு பற்றி ஆண்டுதோறும் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.