அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்வியை சந்திப்பதால் அதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை இணைக்க லைவர்கள் சம்மதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் சூழலில் டெல்டா பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேர் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.