கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாட்டின்கராவில் உள்ள ஸ்ரீ காருண்யா சிறப்பு விடுதியில் 65 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 10 மாணவர்களை காலரா நோய் தாக்கியுள்ளது. அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் 11 பேருக்கு நோய் அறிகுறிகளும், 9 பேருக்கு நோய் தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனு என்று 26 வயது இளைஞர் காலரா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.