தமிழகத்தில் மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு வரும் 15ஆம் தேதி முதல், மாதந்தோறும் ₹1000 வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிகழ்ந்த “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் 2ஆவது கட்ட தொடக்க விழாவில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்