புதுக்கோட்டை வம்பன் காட்டுப் பகுதியில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். வம்பன் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி துரையை பிடிக்க சென்றபோது, அவர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். ரவுடி துரையை பிடிக்க சென்றபோது போலீசாரை தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவுடி துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். உதவி ஆய்வாளர் மகாலிங்கம் பிடிக்க சென்ற போது ரவுடி துரை வெட்டியதை தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரவுடி துரை மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 70 வழக்குகள் ரவுடி துரை மீது பதியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023 இல் திருச்சியில் ஏற்கனவே திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது இவர் தப்பி சென்றுள்ளார். அப்போது அவர் தாக்கியதில் 5 காவலர்கள் காயமடைந்துள்ளனர். 2023 இல் தப்பி சென்றபோது போலீஸ் சுட்டதில் காலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று திரும்பினார் துரை. .