விராட் கோலி பாகிஸ்தானில் வந்து விளையாடினால் அவர் இந்திய விருந்தோம்பலை மறந்துவிடுவார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறியுள்ளார். பாகிஸ்தான் வீரர்களைக் காட்டிலும் விராட் கோலிக்கு பாக்கிஸ்தானில் அதிக ரசிகர்கள் இருப்பதாகக் கூறிய அவர், கோலி பாகிஸ்தானில் விளையாடுவதைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்றார். அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.