அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை ஓபிஎஸ் செய்துள்ளதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூவரும் அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்து வளர்ந்த அட்டை பூச்சிகள் என விமர்சித்த அவர், பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே இடித்து உடைத்த கருங்காலி ஓபிஎஸ்ஸுக்கு விசுவாசம் என்றால் என்னவென்றே தெரியாது எனச் சாடியுள்ளார்.