தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.13 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெறும் நிலையில், இந்த திட்டத்தில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட 1.48 லட்சம் மகளிருக்கு வருகின்ற ஜூலை 15 ஆம் தேதி முதல் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் பணம் செல்வதை உறுதி செய்ய நாளை 1 ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. மேலும் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.