வட்டி விகித குறைப்பை பற்றி இப்போதே பேச முடியாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு பணவீக்கம் அதிகரித்ததால் அதனை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. தற்போது பணவீக்கம் 5% ஆக குறைந்திருக்கும் நிலையில் மக்கள் வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்கின்றனர். ஆனால் நான்கு சதவீதம் இலக்கை அடைந்த பிறகு வட்டியை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.