குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் இன்று காலை பயங்கர சாலை விபத்து நடந்தது. ராதன்பூரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து லாரி மீது மோதியது. இச்சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டளர். ஆனந்த் நகரில் இருந்து கட்ச் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.