இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீரால் மற்ற அணிகள் கடுமையாக போராடும் சூழல் உருவாகும் என முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். கம்பீரின் ஆக்ரோஷமும், கிரிக்கெட் திறனும் இந்தியாவை சிறப்பாக வழிநடத்த உதவும் எனவும், இந்தியாவை வெல்வது மற்ற அணிகளுக்கு சவாலாக அமையும் எனவும் கூறியுள்ளார். மேலும், அவரிடம் கற்றுகொள்ள ஏராளமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.