மதுரை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்காக போலி டிக்கெட்டுகளுடன் வந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் விமான நிறுவனத்திடம் கேட்டபோது அவ்வாறு எதுவும் டிக்கெட் விற்பனை செய்யவில்லை எனக்கூறியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் தனியார் விமானம் மூலம் அயோத்தி கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி இந்த மோசடி நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.