புதுக்கோட்டையில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட திருச்சியை சேர்ந்த ரவுடி துரையின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரவுடி துரையின் மரணத்திற்கு நீதி கேட்டு புதுக்கோட்டை – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.