குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதைப்பொருட்கள் கடத்தி வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசும் போதை பொருட்கள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற அவர், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ள கொலை கொள்ளை சம்பவங்களை ஒப்பிடும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் குறைவாக தான் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.