தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே.ரகுராம கிருஷ்ண ராஜுவின் புகாரை தொடர்ந்து, ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தான் கைது செய்யப்பட்ட போது துன்புறுத்தப்பட்டதாகவும், அதற்கு ஜெகனும், அதிகாரிகளும் சதித்திட்டம் தீட்டியதாகவும் அந்த புகாரில் எம்எல்ஏ ரகுராம கிருஷ்ண ராஜு தெரிவித்துள்ளார்.