நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகள் மீது பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பின்மை 6.3 சதவீதத்தில் இருந்து 9.3 சதவீதமாக அதிகரித்து, இளைஞர்களின் எதிர்காலம் பூஜ்ஜியமாகி உள்ளதாக விமர்சித்த அவர், இனியும் தன்னிச்சையான முறையில், நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பது நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்