தமிழக அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCOவை இரண்டாக பிரிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. விரைவில் தனித்தனியாக இவ்விரு நிறுவனங்களும் செயல்படும் எனத் தெரிகிறது.