தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ள நிலையில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். முதலமைச்சருக்கு முன்னதாகவே அங்குச் செல்லும் அவர், தொழில் முதலீடுகள் தொடர்பாக பல்வேறு தொழில்துறை அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.